திருநெல்வேலி மாவட்டம் மணிமுத்தாறு அணையின் மேலே அமைந்துள்ள மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்களை சந்திக்க சென்ற புதிய தமிழகம் கட்சி வழக்கறிஞர்கள் – நிர்வாகிகள் மணிமுத்தாறு வனச் சோதனை நிலையத்தில் தடுத்து நிறுத்தம்.*
நேற்று (06.06.2024) தென்காசியில் புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் & தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி அவர்கள் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தபடி, மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் விருப்ப ஒய்வு பெற வலுகட்டாயமாக BBTC நிர்வாகத்தால் கையெழுத்து பெறுவதாக தோட்டத் தொழிலாளர்களிடமிருந்து தகவல் வந்ததையொட்டி, இன்று (07.06.2024) புதிய தமிழகம் கட்சியின் வழக்கறிஞர் அணியினர் மற்றும் நிர்வாகிகள் சென்ற வாகனங்களை காலை 7 மணிக்கு மணிமுத்தாறு வனசோதனை நிலையத்தில் வனத்துறை மற்றும் காவல்துறையினர் இணைந்து தடுத்து நிறுத்தினர்.
மேலும், சுற்றுலா பயணியாக செல்ல அனுமதிக்கிறோம் எனவும்; அங்குள்ள தோட்டத் தொழிலாளர்களை சந்திக்கவோ, தொழிலாளர் நலன் குறித்து பேசவோ மாட்டோம் என எழுத்துப்பூர்வமாக எழுதி கொடுத்துவிட்டு செல்லுமாறு தெரிவித்துள்ளனர்.
புதிய தமிழகம் கட்சி நிர்வாகிகள் அதற்கு மறுப்பு தெரிவித்து செய்தியாளர்களை சந்தித்து வருகின்றனர்.
-புதிய தமிழகம் கட்சி,
செய்தி பிரிவு