கமுதி -வெள்ளையாபுரத்தில் தியாகி இம்மானுவேல் சேகரன் 101-வது பிறந்த நாள் விழா
கமுதி,ராமநாதபுரம் மாவட்டம், கமுதி வெள்ளையாபுரத்தில் தியாகி இமானுவேல் சேகரன் 101 -வது பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது.
கமுதி -வெள்ளையாபுரத்தில் தியாகி இம்மானுவேல் சேகரன் 101-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.
தேவேந்திரகுல இளைஞர் எழுச்சி பேரவை தலைவர் தளபதிராஜ்குமார் தலைமையில் நடைபெற்றது. இதில் கிராமத் தலைவரும், கவுன்சிலருமான ஜோதி ராஜா, பேரவை பொதுச் செயலாளர் அழகேசன்,மாநில இளைஞரணி தலைவர் பிரவீன்ராஜ்,
ஒன்றிய செயலாளர் முனியசாமி மற்றும் ஆறுமுகம்,கணேசன்,குப்புச்சாமி,சக்திவேல்
மற்றும் கிராம பொது மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
பின்னர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.