தேனி மாவட்டம் சுருளி அருவி பகுதிகளில் காட்டு யானைகள் நடமாட்டம் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளி அருவி மாவட்டத்தின் மிகச் சிறந்த சுற்றுலா தலமாகும்.

சுருளி அருவிக்கு சுற்றுலா பயணிகள் வருவது அருவியில் குளித்துவிட்டு இங்குள்ள புண்ணிய ஸ்தலங்களில் வழிபாடு செய்வதற்காகவும் மற்றும் இறந்த முன்னோர்களுக்கு திதி மற்றும் இறந்த கருமாதி போன்ற காரியங்கள் செய்வதற்காக தேனி மாவட்டம் மட்டுமல்லாமல் மதுரை திண்டுக்கல் கரூர் சேலம் மற்றும் தமிழகத்திலிருந்து பல பகுதிகளிலிருந்தும் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் வந்து மேற்கண்ட காரியங்களை முடித்து விட்டு செல்வார்கள் தற்பொழுது சுருளி அருவி வனப்பகுதிக்குள் உள்ளது

இந்த வனப்பகுதிக்குள் காட்டு யானைகள் நடமாட்டம் கடந்த சில நாட்களாக இருப்பதால் பொதுமக்கள் குளிக்க செல்லும் போது காட்டு யானைகளால் பொது மக்களுக்கு பாதிப்பு வந்து விடக்கூடாது என்று பொதுமக்களின் பாதுகாப்பு நலன் கருதி சுருளி அருவியில் குளிக்க தடை விதித்து வனத்துறையினர் உத்தரவிட்டுள்ளனர்.

மேலும் அந்த காட்டு யானை கூட்டத்தை வனப்பகுதிக்கு இடம்பெற செய்வதற்காக வனத்துறையினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்

இதனால் கோடை விடுமுறையின் கடைசி நாளான இன்று அருவியில் குளிக்க முடியாமல் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் அருவிக்கு வந்து திரும்பிச் சென்றனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *