ஆக்சிஜன் – மரம் -விதைப்பந்து குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி.
மதுரையில்
டாக்டர் அப்துல்கலாம் வழியில் நண்பர்கள் அமைப்பு மற்றும் சுப்பராயலு நினைவு நடுநிலைப்பள்ளி இணைந்து நடத்திய பள்ளி மாணவர் களுக்கான கோடைகால இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி முகாமில் மாணவச்செல்வங்களுக்கு இன்றைய வெயிலுக்கான காரணம் மரம் வளர்ப்பில் அவசியம் மரம் இல்லையேல் மனிதன் சுவாசிக்க ஆக்சிஜன் சிலிண்டர் சுமக்கும் நிலை ஏற்படும் என்பதனை மாதிரி ஆக்சிஜன் சிலிண்டர் வடிவம்கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தியும், மண்வளத்தை பாதுகாக்க நெகிழி பை தவிர்த்து மஞ்சப்பை துணிப்பை பயன்படுத்துவதன் அவசியம் குறித்தும் விதைப்பந்துகள் குறித்தும் எடுத்துக்கூறி அனைவருக்கும் விதைப்பந்துகளை வழங்கிசமூக ஆர்வலர் அசோக்குமார் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
இந்த நிகழ்விற்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். மாணவ, மாணவியர், ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.