பெரம்பலூர் அருகே சிறுகுடல் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ மகாசக்தி மாரியம்மன் திருக்கோயில் திருத்தேரோட்டம்.
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் சிறுகுடல் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ மகா சக்தி மாரியம்மன் திரு தேர் திருவிழா மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது
கடந்த 2-6 – 24-ம் தேதி சந்தன காப்பு கட்டி சக்தி அழைத்தல் தொடங்கி தினமும் ஶ்ரீ மகா சக்தி மாரியம்மனுக்கு மலர் அலங்காரத்துடன் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன பின்னர் தினமும் சாமி திருவீதி உலா நடைபெற்றது.பத்தாம் நாளான
தேர் திருவிழா முன்னிட்டு ஸ்ரீ மகா சக்தி மாரியம்மன் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது அதை தொடர்ந்து மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ஶ்ரீ மகாசக்தி மாரியம்மன் மேள தாளங்கள் வெடிகள் முழங்க தேரடிக்கு கொண்டுவரப்பட்டது.
சுமார் 1000 -க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து ஊரின் மூக்கிய வீதி வழியாக சென்று மாலை தேர் கோயிலின் நிலைக்கு வந்து நிறுத்தப்பட்டது
இத்தரோட்டத்தில் பெண்கள் கோலாட்டம் மற்றும் தண்டை மேளம் முழங்கஉலா வந்தன இந்த தேரோட்டத்தில் கீழப்புலியூர் செங்குணம், பீல்வாடி,வாலிகண்டபுரம்,உள்ளிட்ட கிராம மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் மருவத்தூர் போலீசார் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க பாதுகாப்பு பணியில் இருந்தனர் விழா ஏற்பாடுகளை கிராம மூக்கியஸ்தர்கள் செய்திருந்தனர்