பெரம்பலூர் மாவட்டம்
மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி க.கற்பகம் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில்
குழந்தைத் தொழிலாளர் முறையினை அகற்றும் உறுதிமொழியினை அனைத்து அரசு அலுவலர்களும் ஏற்றனர்.

            தொழிலாளர் நலத்துறையின் சார்பில் ஆண்டுதோறும் சூன் மாதம் 12 ஆம் நாள் உலக குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினமாக அனுசரிக்கப்பட்டு வருவதை முன்னிட்டு இன்று (12.06.2024) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குழந்தை தொழிலாளர் முறையினை அகற்றுவதற்கான உறுதிமொழி ஏற்கும் நிகழ்வு மாவட்ட ஆட்சித்தலைவர் க.கற்பகம்   தலைமையில் நடைபெற்றது.
            “இந்திய அரசியலமைப்பு விதிகளின்படி கல்வி பெறுவது குழந்தைகளின் அடிப்படை உரிமை என்பதால் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை ஒருபோதும் எந்தவித பணிகளிலும் ஈடுபடுத்த மாட்டேன் எனவும், அவர்கள் பள்ளிக்குச் செல்வதை ஊக்குவிப்பேன் எனவும், குழந்தைத் தொழிலாளர் முறையினை முற்றிலுமாக அகற்றிட சமுதாயத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்துவேன் என்றும், தமிழ்நாட்டை குழந்தை தொழிலாளர் அற்ற மாநிலமாக மாற்றுவதற்கு என்னால் இயன்றவரை பாடுபடுவேன் எனவும் உளமார உறுதி கூறுகிறேன்” என்ற உறுதிமொழியினை மாவட்ட ஆட்சித்தலைவர்  க.கற்பகம்  வாசிக்க, அனைத்து துறை அலுவலர்களும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். 

அதனைத்தொடர்ந்து குழந்தை தொழிலாளர் முறையினை அகற்றுவது குறித்த விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கையெழுத்திட்டு துவக்கி வைதத்தார்கள் இந்நிகழ்ச்சியில் தொழிலாளர் நல உதவி ஆணையர்கள் (அமலாக்கம்) க.மூர்த்தி, பாஸ்கரன், மாவட்ட ஆட்சியர் அலுவலக மேலாளர் பாரதிவளவன், தொழிலாளர் துணை ஆய்வாளர் திவாகரன், தொழிலாளர் உதவி ஆய்வாளர் ராணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *