பெருங்கட்டுர் கிளை நூலகத்தில் +2, 10 th தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது

திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், செய்யார் அடுத்த பெருங்கட்டூர் ஊர்புற நூலகத்தில் பன்னிரண்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு தேர்வில் சிறப்பிடம் பெற்ற அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி பெருங்கட்டூர் அளவில் முதல் மூன்று இடங்கள்‌ பிடித்த மாணவ மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது.

இந்த நிகழ்வில் ஒன்றியக் குழு உறுப்பினர் சத்யா பக்தன் தலைமை வகித்தார். முதுகலை ஆசிரியர் மு.சந்தானம், பட்டதாரி ஆசிரியர் ம. நடராஜன், உடற்கல்வி ஆசிரியர் ரா.தீபாவினோதினி, தமிழ்ச்செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பன்னிரண்டாம் வகுப்பில் முதலிடம் பிடித்த யுவஸ்ரீ, டோமேசன் ஆகியோருக்கு தலா ரூபாய் 5000 மற்றும் புத்தகப் பரிசும், இரண்டாம் இடம் பிடித்த வித்தியப் பிரியா, யுவராஜன் ஆகியோருக்கு தலா ரூபாய் 3000 மற்றும் புத்தகப் பரிசும், மூன்றாம் இடம் பிடித்த மோகனப் பிரியா, உதயகதிரவன் ஆகியோருக்கு தலா ரூபாய் 2000 மற்றும் புத்தகப் பரிசு வழங்கப்பட்டது.

மேலும் பத்தாம் வகுப்பில் முதலிடம் பிடித்த புனிதவதி, தமிழ்ச்செல்வன் ஆகியோருக்கு தலா ரூபாய் 3000 மற்றும் புத்தகப் பரிசு, இரண்டாம் இடம் பிடித்த ஹேமலதா, விஷ்ணு ஆகியோருக்கு தலா ரூபாய் 2000 மற்றும் புத்தகப் பரிசு, மூன்றாம் இடம் பிடித்த யுவஸ்ரீ, ரகுநாத் ஆகியோருக்கு தலா ரூபாய் 1000 மற்றும் புத்தகப் பரிசுகளை பெருங்கட்டூர் கிராம நிர்வாக அலுவலர் த. பழனி வழங்கி சிறப்புரை ஆற்றினார்.

நிகழ்வில் பெற்றோர்கள், நூலக வாசகர்கள் கலந்து கொண்டனர். நிகழ்வில் பட்டதாரி ஆசிரியர் ம. நடராஜன் ரூபாய் 1000 செலுத்தி நூலக புரவலராக இணைந்தார். இறுதியில் பொறுப்பு நூலகர் ஜா.தமீம் நன்றி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *