கம்பம் நகரில் புதிய தார்சாலை அமைக்கும் பணியினை நகர் மன்ற தலைவர் வனிதா நெப்போலியன் மற்றும் நகராட்சி ஆணையாளர் வாசுதேவன் ஆய்வு
தேனி மாவட்டம் கம்பம் நகராட்சி 14 வார்டு செக்கடி தெருவில் தார்சாலை அமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது
மற்றும் நகரில் உள்ள 33 வார்டுகளிலும் மக்களுக்கு அடிப்படை தேவைகளான கழிவுநீர் கால்வாய் தார் சாலை புதிய குழாய் இணைப்பு போன்ற மக்களின் அடிப்படைத் தேவைகளை அவர்களின் கோரிக்கைகளை உடனுக்குடன் நிறைவேற்றும் விதமாக நகராட்சியில் அளிக்கப்படும் புகார் மனு பெட்டியில் போடப்படும் பொது மக்களின் கோரிக்கை மனுக்கள் மட்டுமில்லாமல் 33 வார்டு நகர் மன்ற உறுப்பினர்களின் கோரிக்கையும் உடனடியாக நிறைவேற்றப்படுகிறது
இதன் படி கம்பம் நகராட்சிக்கு உட்பட்ட 14 வது வார்டு செக்கடி தெருவில் நடைபெற்று வரும் தார்சாலை பணிகளை நகர் மன்ற தலைவர் வனிதா நெப்போலியன் மற்றும் நகராட்சி ஆணையாளர் வாசுதேவன் பொறியாளர் பன்னீர் மற்றும் நகராட்சி அதிகாரிகள் நடைபெற்று வரும் பணிகளை ஆய்வு செய்து அந்தப் பணிகள் தரமாகவும் அதே சமயத்தில் மக்கள் பயன்பாட்டிற்கு விரைந்து பணிகளை முடிக்க வேண்டும் பணிகளை முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்
இந்த நிகழ்ச்சியில் நகர் மன்ற தலைவர் வனிதா நெப்போலியன் நகராட்சி ஆணையாளர் வாசுதேவன் பொறியாளர் பன்னீர் மற்றும் நகராட்சி அதிகாரிகள் 33 வார்டு நகர் மன்ற உறுப்பினர்கள் நகர பிரமுகர்கள் பலர் உடனிருந்தனர்