ராஜபாளையத்தில் ஜமாபந்தி எனப்படும் வருவாய் தீர்ப்பாய கணக்குகள் தணிக்கை!
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் வட்டத்தில் 4 பிர்க்காக்களும், 36 ஊராட்சிகளும் இருந்து வருகின்றன.
இக்கிராமங்களில் உள்ள வருவாய் தீர்ப்பாய கணக்குகள் ஒவ்வொரு ஆண்டும் தணிக்கை செய்யப்படுவது வழக்கம். இந்த ஆண்டு ஜமாபந்தி எனப்படும் வருவாய் தீர்ப்பாயக் கணக்குகள் தணிக்கை விருதுநகர் மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் டி. ரமேஷ் தலைமையில் நடைபெற்றது.
ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பல்வேறு பிரச்சினைகளுக்கான மனு கொடுத்தனர் கொடுக்கப்பட்ட மனுக்களின் மீது விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
வருவாய்த்துறை அதிகாரிகள், கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.