கூடலூர் நகராட்சி பகுதியில் நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநர் ஆய்வு. தேனி மாவட்டம் கூடலூர் நகராட்சி பகுதியில் நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் முஜிபுர் ரஹ்மான் ஆய்வு மேற்கொண்டார்.
கூடலூர் நகராட்சி பகுதியில் புதியதாக கட்டப்பட்டு வரும் பேருந்து நிலையம், வார சந்தை பணிகளை துரிதமாக முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர விரைந்து பணிகளை முடிக்க வேண்டும் என உத்தரவிட்டார் .
இதனைத் தொடர்ந்து நகராட்சி நுண் உர செயலாக்க மையங்களில் ஆய்வு மேற்கொண்டு தினசரி சேகரிக்கப்படும் மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை சிறந்த முறையில் செயலாக்கம் செய்ய உரிய அறிவுரைகளை வழங்கினார்
இந்த ஆய்வின்போது நகராட்சி ஆணையாளர் கே எஸ் காஞ்சனா நகர் மன்ற தலைவர் பத்மாவதி லோகந்துறை பொறியாளர் பு.பன்னீர் ஓவர்சியர் முத்துக்குமார் மேலாளர் வெங்கட் சுகாதார அலுவலர் விவேக் அறிவழகன் மற்றும் நகராட்சி நகர் மன்ற உறுப்பினரும் நகர திமுக செயலாளருமான லோக ந் துரை உள்ளிட்ட நகர்மன்ற உறுப்பினர்கள் நகராட்சி அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் பலர் உடன் இருந்தனர்