லோயர் கேம்ப் மின் உற்பத்தி நிலையத்தில் மின்சார உற்பத்தி அதிகரிப்பு
அணையிலிருந்து நீர் திறப்பு அதிகரித்து வருவதால் நடவடிக்கை தேனி மாவட்டம் தமிழக கேரளா எல்லையை இணைக்கும் முக்கிய நகரம் கூடலூர் 21 ஆவது வார்டு பகுதியான லோயர் கேம்பில் முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தமிழக பகுதிக்கு அதிகம் தண்ணீர் திறக்கப்பட்டதால் லோயர் கேம்ப் பெரியார் நீர் மின் நிலையத்தில் மின்சார உற்பத்தி அதிகரித்து உள்ளது
காலை நிலவரப்படி முல்லைப் பெரியாறு அணையில் இருந்து வினாடிக்கு 511 கனஅடி நீர் நீர் திறக்கப்படுவதால் பெரியார் நீர்மின் நிலையத்தில் 27 மெகா வாட் மின்சார உற்பத்தி செய்யப்பட்ட நிலையில் நீர் திறப்பு அதிகரிப்பால் 46 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது