வானூர் அருகே உள்ள ஆப்பரம்பட்டு கிராமம் உள்ளது இங்கு முக்கிய தொழிலாக விவசாயம் இருந்திருக்கிறது, இந்த பகுதி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ரமா வயது 50, என்பவர் நேற்று இரவு வீட்டில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் வீட்டின் கதவை திறந்து வைத்து குடும்பத்துடன் தூங்கி உள்ளார்,
அப்போது மர்ம நபர்கள் திடீரென ரமா அணிந்திருந்த ஐந்து பவுன் தங்கச் சங்கிலியை அறுத்துக் கொண்டு வேகமாக ஓடினார், இதையடுத்து கூச்சலிட்ட உடன் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர் மர்ம நபரை தேடினார்,
மர்ம நபர் அங்கிருந்து தப்பி ஓட்டம் பிடித்துள்ளார் சிறிது நேரத்தில் ரமா வீட்டின் அருகே உள்ள மற்றொரு இரண்டு வீடுகளிலும் மர்ம நபர்கள் உள்ளே சென்று ஒரு வீட்டில் 2000 பணமும் மற்றொரு வீட்டில் ஒரு பவுன் தங்க நகையும் எடுத்துக்கொண்டு தப்பி ஓடி உள்ளது தெரிகிறது,
பின்னர் ரமா கோட்டகுப்பம் போலீசில் புகார் அளித்துள்ளார்
அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சக்தி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அங்கு ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்,
மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடி கேமரா ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்
இதனிடையே மூன்று வீடு மற்றும் பெண் கழுத்தில் அணிந்திருந்த தங்க சங்கிலியை பெண்ணிடம் அறுத்துச் சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர் இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.