செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் அருகே உள்ள அகிலி தத்துராவ் அறக்கட்டளை இயக்குநருக்கு சமூக பொறுப்பு
விருது வழங்கப்பட்டது.
டாக்டர் தத்து ராவ் நினைவு அறக்கட்டளை பாத்வே
இயக்குனர், பொதுச் செயலாளர்
மற்றும் இணை நிறுவனர் டாக்டர்.
சந்திரபிரசாத்துக்கு சமூக ஈடுபாடு மற்றும் சமூகப் பொறுப்பு விருது – 2024 க்கான ASSOCHAM தென் மண்டல HR Trailblazer விருது பெங்களூரில் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
மேலும் இந்த மதிப்புமிக்க விருதை, தலைமை விருந்தினராக, கர்நாடக அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் தினேஷ்
குண்டு ராவ் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் கர்நாடக அரசின் கர்நாடக டிஜிட்டல் பொருளாதார இயக்கத்தின் தலைவர் பி.வி.நாயுடு, டி.ஆர். பரசுராமன், ASSOCHAM கர்நாடக மாநில வளர்ச்சிக் குழுவின் தலைவர் மற்றும் நிர்வாக ஆலோசகர் மற்றும் ASSOCHAM தென் மண்டலத் தலைவர் அகஸ்டஸ் அசரியா. ஆகியோர் இந்த குறிப்பிடத்தக்க சாதனைக்காக டாக்டர் சந்திர பிரசாத்திற்கு வழங்கி அனைத்து எதிர்கால முயற்சிகளிலும் தொடர்ந்து வெற்றிபெற
வாழ்த்து தெரிவித்தனர்.