திருவாரூர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உலக குருதி கொடையாளர் தினத்தினை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் ரத்த தானம் செய்தார்.

திருவாரூர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உலக குருதி கொடையாளர் தினத்தினை முன்னிட்டு தன்னார்வலர்கள் குருதி கொடையளிப்பதனை மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ ரத்த தானம் செய்து தன்னார்வலர்கள் ரத்த தானம் செய்வதை பார்வையிட்டார்

ஒவ்வொரு வருடமும் ஜூன் 14 உலக குருதி தானம் செய்பவர்கள் தினம் கொண்டாடப்படுகிறது.
உலக இரத்த தானம் செய்பவர்கள் தினத்தின் 20வது ஆண்டு நிறைவானது, பல ஆண்டுகளாக உயிர் காக்கும் நன்கொடைகளுக்காக உலகெங்கிலும் உள்ள இரத்த தானம் செய்பவர்களுக்கு நன்றி தெரிவிப்பதற்கும் நோயாளிகள் மற்றும் நன்கொடையாளர்கள் இருவருக்கும் ஏற்பட்ட ஆழமான தாக்கத்தை கௌரவிக்கும் ஒரு சிறந்த மற்றும் சரியான நேரத்தில் வாய்ப்பாகும்.

சவால்களை எதிர்கொள்வதற்கும், பாதுகாப்பான இரத்த மாற்றம் உலகளாவிய ரீதியில் அணுகக்கூடிய எதிர்காலத்தை நோக்கி முன்னேறுவதற்கும் இது ஒரு சரியான தருணமாகும்
உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான மக்களின் ஆரோக்கியத்திற்கும் நல்வாழ்விற்கும் பங்களித்த மில்லியன் கணக்கான தன்னார்வ இரத்த தானம் செய்பவர்களுக்கு நன்றி மற்றும் அங்கீகாரம் பாதுகாப்பான இரத்தமாற்றத்திற்கான உலகளாவிய அணுகலைப் பெறுவதற்கு வழக்கமான செலுத்தப்படாத இரத்த தானத்தின் தொடர்ச்சியான தேவையை எடுத்துக்காட்டுகிறது

உலக இரத்த தானம் செய்பவர்கள் தின கொண்டாட்டத்தின் முக்கிய நோக்கங்களானவை நோயாளிகளுக்கு பாதுகாப்பான இரத்தம் மற்றும் போதுமான அளவு இரத்த தயாரிப்புகளை அணுகும் ஒரு இரத்த சேவை ஒரு பயனுள்ள சுகாதார அமைப்பின் முக்கிய அங்கமாகும். உலக இரத்த தானம் செய்பவர்கள் தினத்தின் உலகளாவிய கருப்பொருள் ஒவ்வொரு ஆண்டும் தங்களை அறியாத மக்களுக்காக தங்கள் இரத்தத்தை தானம் செய்யும் தன்னலமற்ற நபர்களை அங்கீகரிக்கும் விதமாக மாறுகிறது இளைஞர்கள் மற்றும் பொது மக்களிடையே வழக்கமான இரத்த தானம் செய்யும் கலாச்சாரத்தை ஊக்குவித்தல் மற்றும் இரத்த தானம் செய்யும் குழுவின் பன்முகத்தன்மை மற்றும் நிலைத்தன்மையை அதிகரிப்பதும் ஆகும்
அதனைத்தொடர்ந்து, அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உலக குருதி கொடையாளர் தினத்தினை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ தன்னார்வலர்களும் குருதி கொடையளித்தனர்

மேலும், திருவாரூர் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் குருதி கொடையளித்த தன்னார்வலர்களுக்கு கேடயத்தினையும், பாராட்டு சான்றிதழினையும் மாவட்ட ஆட்சியர் வழங்கினார்

முன்னதாக, உலக குருதி கொடையாளர் தினத்தினை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் தலைமையில் அனைத்துறை அரசு அலுவலர்களும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்

நிகழ்வில், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் மருத்துவர் ஜோசப்ராஜ் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகளின் இணை இயக்குநர் டாக்டர் கா.திலகம், துணை இயக்குநர் (காசநோய்) டாக்டர் புகழ், எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்க மாவட்ட மேற்பார்வையாளர் ராமஜெயம் நோய்குறியியல் துறை மற்றும் மாவட்ட குருதி பரிமாற்ற அலுவலர் டாக்டர் சுபசித்ரா திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் பிரபா உள்ளிட்ட அரசு அலுவலர்கள் மருத்துவர்கள் செவிலியர்கள் ஆகியோர் பங்கேற்றனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *