ரயில்வே ஓட்டுனர் சங்கத்தினர், பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி மதுரை ரயில் நிலையம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அகில இந்தியா லோகோ பைலட் சங்கம் சார்பில், மதுரை ரயில்வே நிலையத்தின் மேற்கு நுழைவு வாயிலில் நேற்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம். நடைபெற்றது.
சங்கத்தின் கோட்ட தலைவர் ராமர் தலைமை வகித்தார். செயலாளர் ஜீவா முன்னிலை வகித்தார். செயல் தலை வர் சிவக்குமார், கூட்ட மைப்பு நிர்வாகிகள் சங்கர நாராயணன், கண்ணன் ஆகியோர் விளக்கவுரை ஆற்றினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள், வாரந்தோறும் இரவு பணி நாட்களை இரண்டாக குறைத்திட வேண்டும். வார விடுப்பு 46 மணி நேரம் வழங்க வேண்டும். வெளியூர் சென்று வேலை பார்க்கும் ஓட்டுநர்களை 48 மணி நேரத்தில் தலைமை நிலையத்திற்கு கொண்டு வர வேண்டும். ஓட்டுனர் பணிக்காலத்தை 10 மணி நேரமாக குறைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.