திருநெல்வேலி மாவட்டம் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகம் மீது தாக்குதல் – வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.! டாக்டர் கிருஷ்ணசாமி MD. Ex MLA அறிக்கை
இரு வேறு சாதிகளைச் சார்ந்த ஒரு இளம் தம்பதியருக்கு திருமணம் செய்து வைத்ததற்காக திருநெல்வேலி இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகம் சூறையாடப்பட்டிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
தென் மாவட்டங்களில் சாதிய படுகொலைகள், கூலிப்படை கலாச்சாரங்கள் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து ஒரு ஆணும் பெண்ணும் விரும்பி திருமணம் செய்து கொண்டதற்கு உதவிகரமாக இருந்ததற்குக் கூட நூறாண்டுக் காலம் பாரம்பரியமிக்க கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகம் தாக்கப்பட்டது
எவ்விதத்திலும் ஏற்புடையதல்ல. இது ஆணவத்தின் உச்சக்கட்டம். இவ்வன்முறை சம்பவத்திற்கு காரணமான அனைவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநில அரசை வலியுறுத்துகிறேன்