மதுரையில் புகழ் பெற்ற கரிமேடு பதுவை புனித அந்தோணியார் ஆலய 134 ம் ஆண்டு திருவிழா கடந்த ஜுன் 3ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடை பெற்று வருகிறது.
முன்னதாக அலங்கரிக்கப்பட்ட கொடி பவனியாக எடுத்துவரப்பட்டு ஆலய நுழை வாயிலில் உள்ள கொடிமரத்தில் மதுரைதெற்கு மறை வட்டார அதிபரும், ஜெபமாலை அன்னை ஆலய பங்குத் தந்தையுமான அருட் தந்தை அமல்ராஜ் கொடியினை ஏற்றி வைத்து சிறப்பு திருப்பலி நிறைவேற்றி விழாவை தொடக்கி வைத்தார்.
தொடர்ந்து தினமும் மாலை 5.30 மணிக்கு ஜெபமாலை வழிபாடு மற்றும் பல்வேறு பங்குகளை சார்ந்த அருட்தந்தையர்கள் பல்வேறு தலைப்புகளில் மறையுறை வழங்கி சிறப்புத்திருப்பலி நிறைவேற்றி வருகிறார்கள்.
விழாவில் முக்கிய நிகழ்வாக நேற்று 15 ம் தேதி சனிக்கிழமை மைக்கேல் பாளையம் மிக்கேல் அதிதூதர் ஆலய பங்குத்தந்தை வின்சென்ட் ராஜா தலைமையில் மதுரை ஞான ஒளிவுபுரம் புனித வளனார் ஆலய பங்குத்தந்தை ஜோசப், உதவி பங்குத்தந்தை மதியழகன் ஆகியோர் திருவிழா திருப்பலி நிறைவேற்றினர்,
அதனைத் தொடர்ந்து புனித அந்தோணியார் திருவுருவம் தாங்கிய மின் அலங்கார சப்பர பவனி நடைபெற்றது. சப்பர பவனியை தொடர்ந்து இன்று 16ம் தேதி ஞாயிறு மாலை திருப்பலிக்குப்பின் கொடியிறக்கத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது.
நாளை 17 ம் தேதி திங்கட்கிழமை அன்று சமபந்தி விருந்து நடைபெறுகிறது விழாவுக்கான ஏற்பாடுகளை பங்குத்தந்தை ஜோசப், உதவி பங்கு தந்தை மதியழகன் தலைமையில் கரிமேடு அந்தோணியார் ஆலய நிர்வாகிகள் செய்திருந்தனர் குறிப்பாக இந்த கரிமேடு பதுவை அந்தோணியார் ஆலயம் என்பது கிறிஸ்தவர்கள் மட்டுமின்றி பல்வேறு மதத்தினரும் இந்த விழாவை இணைந்து நடத்தி வருகின்றனர், என்பது குறிப்பிடத்தக்கது.