புழல் புனித அந்தோனியார் ஆலயத்தின் 53வது ஆண்டு திருவிழா
செங்குன்றம் செய்தியாளர்
புழல் அந்தோனியார் நகரில் உள்ள அந்தோனியார் ஆலயத்தின் 53வது ஆண்டு திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. கடந்த 12ம் தேதி முதல் கொடியேற்றத்துடன் துவங்கி பதினாறாம் தேதி வரை நடைபெறும் இந்நிகழ்வின்
நான்காம் நாளான நேற்று தேர் பவனியை பெரவள்ளூர் பங்குத்தங்கை அருள்ராஜ் மற்றும் புழல் பங்குத்தந்தை போஸ்கோ ஆகியோர்கள் துவக்கிவைத்து கூட்டு திருப்பலி நடத்தினர் .
முக்கிய வீதிகளில் ஊர்வலமாக வந்த தேர் பவணியில் அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான ஆண்கள் பெண்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
மேலும் பங்குதந்தை பேசும் போது இந்த ஆலயம் கடந்த 53 ஆண்டுகளாக புழல் பகுதியில் இயங்கி வருவதாகவும் ஆலயத்திற்கு வருகை தரும் பக்தர்கள் அனைவரும் நல் ஆசீர் பெற்று பல அற்புதங்களையும் பெற்று செல்வதாகவும் இந்த ஆலயத்தில் உடல்நலம் பாதிக்கப்பட்டு மற்றும் மன நலம் குறைவுள்ளர்களும் வழிபட்டு தங்களுடைய குறைகளை வேண்டுதல் மூலம் அதனை நிவர்த்தி செய்து செல்கின்றார்கள் என தெரிவித்தார்.