பெரம்பலூரில் ஆணவக் குற்றங்களுக்கு எதிராக தனிச்சட்டம் இயற்றக்கோரி சமூக நீதி கருத்தரகம் நடைபெற்றது
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டத்தில் புதிய பேருந்து நிலையம் அருகே தனியார் மீட்டிங் ஹாலில் ஆணவக் குற்றங்களுக்கு எதிராக தனி சட்டம் இயற்றக் கோரி சமூக நீதி கருத்தரங்கம் நடைபெற்றது
இக்கூட்டத்தில் சங்கர் சமூக நீதி அறக்கட்டளை தலைவர் கௌசல்யா தலைமை வகித்தார் விடுதலைச் சிறுத்தை கட்சியின் மேற்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் ரத்தினவேல் ,இந்தோ அறக்கட்டளை செல்வகுமார்.ஆசிரியர் சிலம்பரசன், பி ,எஸ். பி மாவட்ட அமைப்பாளர் ஆனந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விடுதலைச் சிறுத்தை கட்சியின் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி மேல்நிலைப் பொறுப்பாளர் .இரா.கிட்டு சி.பி.ஐ .மாவட்ட செயலாளர் ஜெயராமன்.விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் மாநில குழு உறுப்பினர். சி.பி.எம். கலையரசி ஆகியோர் கருத்துரை வழங்கினர் கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக எவிடன்ஸ் செயல் இயக்குனர் எவிடன்ஸ் கதிர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
மேலும் இக்கூட்டத்தில் விடுதலைச் சிறுத்தை கட்சியின் மாநில செயலாளர் வீர .செங்கோலன். அம்பேத்கர் கல்வி மற்றும் பொருளாதார அறக்கட்டளை தலைவர் கிருஷ்ணசாமி. கை.களத்துர் செல்வராஜ், ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் கரு.அய்யம்பெருமாள்.
அம்பேத்கோகுல் .அழகு முத்து. ஏவிடன்ஸ் நெறியாளர் முத்து, கலந்து கொண்டனர் . ஜெய் பீம் கல்வி அறக்கட்டளை தலைவர் ஆதிராஜா வரவேற்புரையாற்றினார்.
இறுதியாக பௌத்த சிறுபான்மையினர் நலக்குழு உறுப்பினர் போதி பகவான் நன்றி உரையாற்றினார் இக்கூட்டத்தில் ஆணவபடுகொலைக்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.