தேனி நகராட்சி நகர்மன்ற தலைவர் இல்லத்திற்கே சென்று தேனி பாராளுமன்ற தொகுதி எம்பி தங்க தமிழ்ச்செல்வன் அவர்கள் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் அதிக வாக்குகளை பெற்று வெற்றி பெற உழைத்த நகர் மன்ற தலைவர் மற்றும் நகராட்சி நகர்மன்ற உறுப்பினர்களுக்கும் திமுக நிர்வாகிகளுக்கும் நன்றி தெரிவித்தார்
நன்றி தெரிவித்த எம்பிக்கு நகர் மன்ற தலைவர் தலைமையில் எம் பி.க்கு ஏலக்காய் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்
உடன் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே எஸ் சரவணகுமார் முன்னாள் தேனி நகர் திமுக செயலாளரும் நகராட்சி நகர் மன்ற உறுப்பினருமான சூர்யா பாலமுருகன் மற்றும் தேனி நகர திமுக நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்
முன்னதாக நகர்மன்றத் தலைவர் இல்லத்திற்கு வந்த எம்பி தங்க தமிழ்ச்செல்வனுக்கு மேளதாளத்துடன் வானவேடிக்கை மற்றும் பட்டாசுகள் வெடித்து சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.