கடலூர் அருகே ஒருங்கிணைந்த ஆசிரியர் சங்கத்தின் சார்பில் அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது
வடலூர்
கடலூர் மாவட்டம் வடலூர் வள்ளலார் குருகுலம் மேல்நிலைப் பள்ளியில் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு மலர் வெளியீட்டு விழா மற்றும் கலைஞர் 101 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தமிழ்நாடு ஒருங்கிணைந்த ஆசிரியர் சங்கத்தின் சார்பில் அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது
நிகழ்ச்சியில் தமிழ்நாடு வேளாண்மை துறை அமைச்சர் எம். ஆர். கே. பன்னீர்செல்வம் அவர்கள் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்து கலைஞரின் மலர் வெளியீட்டை வெளியிட்டார்
பின்னர் தமிழ்நாடு ஒருங்கிணைந்த ஆசிரியர் சங்கத்தின் மாநில நிர்வாகிகள் பு.முட்லூர் அரசு பள்ளி தலைமையாசிரியர் ப.வேல்முருகன் அவர்களுக்கு சிறந்த தலைமை பண்பாளர்விருதை வழங்கி கௌரவித்தனர்