பழனி வழக்கறிஞர்கள் சங்க தேர்தல் செயலாளர் தேர்வு.

திண்டுக்கல் மாவட்டம் பழனி திண்டுக்கல் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் வழக்கறிஞர்களுக்கான தேர்தல் நடைபெற்றது.

இந்த தேர்தலில் செயலாளர் பதவிக்கு மூன்று நபர்கள் போட்டியிட்ட நிலையில் சமமாக வாக்குகள் பெற்றன.

இதனைத் தொடர்ந்து மறு தேர்தல் அறிவிக்கப்பட்டு கடந்த 14/06/2024 அன்று தேர்தல் நடைபெற்றன. மீண்டும் மூன்று நபர்கள் களத்தில் இறங்கினர்.

தொடர்ந்து நடைபெற்ற வழக்கறிஞர்கள் சங்க செயலாளருக்கான தேர்தலில் 130 வாக்குகள் பதிவாகிய நிலையில் வழக்கறிஞர் கலை எழில்வாணன் என்பவர் 96 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

இதனைத் தொடர்ந்து சங்க தலைவர் வெற்றி பெற்ற வழக்கறிஞர் கலை எழில்வாணனுக்கு மாலை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

தொடர்ந்து நீதிமன்ற வளாகத்தில் பழனி வழக்கறிஞர்கள் சங்க செயலாளராக கலை எழில்வாணன் என்பவர் தேர்வு செய்யப்பட்டதற்கு அனைத்து வழக்கறிஞர்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *