மரக்கன்று நடும் விழா” ராகவி சினி ஆர்ட்ஸ் கலைக் குழுவின் சார்பில் குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர் தலைமையில் முதன் முதலாக நூறு மரக்கன்றுகள் நடும் விழாவிற்கு சிறப்பு விருந்தினராக திரைப்பட இயக்குனர் எம்.கே.குமார் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். ஒளிப்பதிவாளரும், நடிகருமான பிரேம்ஜி, கருங்காலக்குடி சந்துரு, ஆர்.அப்துர் ரஹீம், தலைவர் மீனா, பிரியா மற்றும் கலைக் குழுவில் உள்ளவர்கள் அனைவரும் வாழ்த்துக்கள் கூறினார்கள்.