சீர்காழியில் தேர்தலில் வெல்வது இல்லை எங்கள் கனவு மக்களின் மனதை வெல்வதும் சிந்தனையை வெல்வதும் தான் எங்கள் கனவு நாம் தமிழர் கட்சி சீமான் பேச்சு

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் நாம் தமிழர் கட்சி மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் காளியம்மாள் சகோதரி திருமண விழா நடைபெற்றது இதில் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் பங்கேற்று மணமக்களை வாழ்த்தி பேசுகையில்,

என்னுடைய நம்பிக்கைக்குரிய தளபதி காளியம்மாள் தங்கையின் திருமணம் என்னுடைய தங்கையின் திருமணம் ஆகும். முதன்முதலாக நாகப்பட்டினத்தில் வேளாண்குடி மக்களுக்கு ஏற்பட்ட பிரச்சனைக்காக மணியரசன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் என்னுடைய தங்கை காளியம்மாள் பங்கேற்று பேசினார்கள்.

அவர் பேசிய பேச்சைக் கேட்டு நான் அவரிடத்தில் பேசினேன். மீனவர் சொந்தங்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்றுவதற்காக அவர்களின் பாதுகாப்பான எதிர்கால நல்வாழ்க்கைக்காக ஒரு அமைப்பை ஏற்படுத்தி இயங்கிக் கொண்டிருந்தவர் அவர். அப்போது மீனவ சொந்தங்களின் இன்னல்களை நானும் அறிவேன். காளியம்மாளும் அதை எடுத்து பேசிக்கொண்டே இருந்தார். நீ பேச வேண்டிய இடம் இந்திய பாராளுமன்றம் எனக் கூறி வட சென்னைபாராளுமன்ற தொகுதியில் நிறுத்தி இருந்தேன்.

வடசென்னைக்கு தொடர்பு இல்லை என்றாலும் பெருவாரியான வாக்குகளை மக்கள் அளித்திருந்தார்கள். நாங்கள் பாராளுமன்றத்தில் போய் பேசுகிறோமோ இல்லையோ மக்கள் மன்றத்தில் எங்கள் கருத்துக்களை தொடர்ச்சியாக பேசி வருகிறோம்.

தேர்தலில் வெல்வது இல்லை எங்கள் கனவு. மக்களின் மனதை வெல்வதும் ,சிந்தனை வெல்வதும் தான் எங்கள் கனவு. நாம் தமிழர் கட்சியில் சீமானை பார்த்து பயப்படுகிறார்களோ இல்லையோ காளியம்மாளை பார்த்து பயப்படுகிறார்கள்.

மேதகு பிரபாகரன் காட்டிய வழியில் அவர் விட்டுச் சென்ற பணியை அவர் ஆயுதம் மிச்சம் வைத்ததை அரசியலாக இன்று முடிக்க வேண்டும் என பேராவலில் அவருடைய பிள்ளைகள் நாங்கள் களத்தில் பாய்கின்றோம்.

என் தோளுக்கு துணையாக என் படைக்கு வலிமைமிக்க தளபதியாக என்னுடைய சகோதரி காளியம்மார் இயங்கிக் கொண்டிருக்கிறார். தேர்தலுக்குப் பிறகு இவ்வளவு சொந்தங்களை கூட்டத்தை பார்ப்பது மகிழ்ச்சியாக உள்ளது. இன்றைக்கு பெரும் கடமையும் பொறுப்பும் உங்களது பிள்ளைகளால் எங்களது தோல்களின் மீது சுமத்தப்பட்டுள்ளது.

உயர்ந்த லட்சிய நோக்கம் உள்ளது. அதனை அடைய பொருளாதார வலிமையோ, ஊடக வலிமையோ இல்லை.உழைப்பே தவிர வேறு ஒன்றும் இல்லை. அதனால் கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கிறோம் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *