தென்காசி

தமிழ்நாடுமின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பாக திருநெல்வேலி மின் பகிர்மான வட்டத்தில் தென்காசிமாவட்டத்தில் தென்காசி கோட்டத்தின் மின் பயனீட்டாளர்கள் குறை தீர்க்கும் முகாம் தென்காசியில் உள்ள செயற் பொறியாளர் அலுவலகத்தில் வைத்து நேற்று நடைபெற்றது.

இந்தக்கூட்டத்திற்கு திருநெல்வேலி மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் செல்வராஜ் கலந்துகொண்டு பொதுமக்கள் அளித்த புகார்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க செயற்பொறியாளர் (பொறுப்பு) தென்காசி கோட்டம் கற்பகவிநாயக சுந்தரம், அவர்களுக்கும் மற்றும் ஏனைய அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டார்.

இந்நிகழ்ச்சியில் தென்காசி கோட்டத்திற்கு உட்பட்ட அனைத்து மின் பொறியாளர்களும் கலந்து கொண்டனர்.

மின் பயனீட்டாளர்கள் குறை தீர்க்கும் முகாம் முடிந்தவுடன் பொறியாளர்கள் மற்றும் அலுவலர்கள் மத்தியில் மேற்பார்வை பொறியாளர் பேசும் பொழுது இயற்கை இடர்பாடுகளான திடீர் சூறைக்காற்று, இடி, மின்னல், மழையால், மின் தடங்கல் ஏற்பட்டால் உடனடியாக போர்க்கால அடிப்படையில் சரி செய்து சீரான மின் விநியோகம் வழங்குவதற்கும், தென்காசி கோட்டத்திற்கு உட்பட்ட உலக புகழ் பெற்ற சுற்றுலா தளமான குற்றாலம் பகுதியில் மின் பாதைகளை தொடர்ச்சியாக ஆய்வு செய்து மரக்கிளைகளால் மின் தடங்கல் ஏற்படும் என தெரிய வந்தால் பாதுகாப்பு கருதி மின் விநியோகத்தை நிறுத்தி உடனடிய உடனடியாக மரக்கிளைகளை அப்புறப்படுத்துவதற்கும், அந்த பகுதியில் உள்ள மின் பாதைகளை தொடர்ச்சியாக ஆய்வு செய்யவும், விவசாய மின் இணைப்புகளை தொடர் ஆய்வு மேற்கொண்டு மின்வேலி அமைக்கப்பட்டு இருந்தால் உடனடியாக மின் துண்டிப்பு செய்து காவல்துறை உதவியுடன் சட்டப்படி
நடவடிக்கை எடுக்கவும், மின் நுகர்வோர்கள் கேட்கின்ற வினாக்களுக்கு உரிய பதிலை கனிவுடன் தெரிவிக்கவும், அனைத்து மின் இணைப்புகளையும் தொடர்ச்சியாக ஆய்வு செய்துவாரிய விதி முறைகளுக்கு முரணாக இருந்தால் உடனடி நடவடிக்கை மேற்கொண்டு வருவாய் இழப்பீட்டை தடுப்பதற்கும், தென்காசி கோட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி மேம்பாட்டு பணிகளை விரைந்து முடிக்கவும்,வருங்கால மின்நுகர்வைகருத்தில் கொண்டு புதிய மின் மாற்றிகள் தேவைபடும் இடங்களில் அமைப்பதற்கும், இணையவழி மூலமாக மின் கட்டணம் செலுத்தும் வசதிகள், மின் பாதுகாப்பு, மின் சிக்கனம், குறித்து பொதுமக்களிடம் தொடர் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் உத்திரவிட்டார்.

பொதுமக்கள் மின்சாரம் சம்பந்தமாக ஏதேனும் உதவி தேவைப்பட்டால் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் செயலி மூலமாகவும், ( TANGEDCO OFFICIALAPP) திருநெல்வேலிமின் தடை நீக்கும் மைய தொலைபேசி எண்கள் 9445859032, 9445859033, 9445859034, மற்றும் மின்னகம் மின் நுகர்வோர் சேவை மையம் தொலைபேசி எண் 94987 94987 தொடர்பு கொண்டு மின்சாரம் சம்பந்தமான அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்து கொள்ளலாம். மின் பயனீட்டாளர்கள் குறைதீர்க்கும்

முகாம் முடிந்தவுடன் குற்றாலம் பகுதிகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக குற்றால அருவிகளில் நீர்வரத்துவந்துள்ளதால் உலகம் முழுவதும் இருந்து சுற்றுலா பயணிகள் வருவதை கருத்தில் கொண்டு நேரடி கள ஆய்வு செய்து சீரான மின் விநியோகம் வழங்க திருநெல்வேலி மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் செல்வராஜ் ஆலோசனை வழங்கி உத்தரவிட்டார்.

தென்காசி கோட்டம செயற்பொறியாளர் ( பொறுப்பு ) கற்பகவிநாயகசுந்தரம், மற்றும் பொறியாளர்கள் பணியாளர்கள் உடன் இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *