பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் பேரளிஊராட்சிக்கு உட்பட்ட மருவத்தூர் கிராமத்தில் தெற்கு தெருவில் சுமார் 30 ஆண்டுகளுக்கு மேலாக சாக்கடைகள் தேங்கி நிற்பதாகவும் இதனால் கொசு தொல்லைகள் அதிகமாக இருப்பதாலும் சாக்கடையில் நாய்கள் பன்றிகள் தங்குவதால் நோய் தொற்று பரவ வாய்ப்பு உள்ளதாகவும் பொதுமக்கள் குற்றம் சான்றுகின்றனர்
இது சம்பந்தமாக மாவட்ட ஆட்சியர் மற்றும் ஊராட்சி மன்ற தலைவரிடம் பலமுறை புகார் கொடுத்ததாகவும் புகார் மீது எந்த நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்
மேற்படி பகுதியில் அமைந்துள்ள சாக்கடையை சுத்தம் செய்து தெரு மீது சாக்கடை செல்லாமல் தடுக்க வேண்டும் அப்பகுதியில் உள்ள 40க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு நோய் தொற்று பரவாமல் ஏற்பாடு செய்யுமாறு அப்போது மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்
மேலும்
சுமார் 50 க்கும் மேற்பட்ட விவசாயிகள் விவசாய நிலத்திற்கு அவ்வழியாகவே செல்ல வேண்டும் அவ்வழியில் சாக்கடை உள்ளதால் உணவு தானியங்கள் ஏற்று வருவதும் போது சிரமமாக உள்ளதாக கூறுகின்றனர்.
பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று சாக்கடையை சரி செய்து மழைநீர் தேங்காாமல் வாய்க்கால் அமைத்து.
விவசாயிகளுக்கும் பொதுமக்களுக்கும் பயன்படும் வகையில் அப்பாதையினை சீரமைக்கும்மாறு பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்தனர்.