தேனி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திலுள்ள, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் 19.06.2024 அன்று காலை 11.30 மணியளவில் நடைபெறவுள்ள சமரசத்திற்கு முந்தைய பேச்சு வார்த்தைகளுக்கான அமர்வில் (Pre-negotiation sittings) நேரிலோ அல்லது காணொளி காட்சி வழியாகவோ கலந்து கொண்டு சமரச முறையில் வழக்காடிகள் மற்றும் வழக்கறிஞர்கள் தங்களது வழக்குகளுக்கு தீர்வு காணலாம்.
மேலும், காணொளி வாயிலாக சமரசத்திற்கு முந்தைய பேச்சு வார்த்தைகளுக்கான அமர்வில் (Pre-negotiation sittings) கலந்து கொள்ள விரும்புவோர் தலைவர் முதன்மை மாவட்ட நீதிபதி, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டிட வளாகம், இலட்சுமிபுரம்-தேனி என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது 04546-291566 என்ற தொலைபேசி வாயிலாகவோ தகவல் தெரிவிக்குமாறு தேனி மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு தலைவர் மற்றும் முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி கே.அறிவொளி தெரிவித்துள்ளார்.