கேளம்பாக்கத்தில் திருக்குறள் வாசகங்கள் பொருந்திய 133 பதாகைகளை கையில் ஏந்தி ஊர்வலமாக சென்று பொதுமக்களுக்கு திருக்குறள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திய பள்ளி மாணவர்கள்.
திருப்போரூர்
செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் ஊராட்சியில் திருவள்ளுவர் கல்வி மன்றத்தின் 10 ஆம் ஆண்டு நிறைவு மற்றும் 11 ஆம் ஆண்டு துவக்க விழா கேளம்பாக்கத்தில் உள்ள தமிழன்னை சமுதாய கூடத்தில் நேற்று நடைபெற்றது
திருவள்ளுவர் கல்வி மன்றத்தின் நிறுவனர் திருக்குறள் தூதர் பழனி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கேளம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் ராணி எல்லப்பன் கலந்து கொண்டு பேரணியை துவக்கி வைத்தார்
ஊராட்சி மன்ற அலுவலகத்திலிருந்து 133 திருக்குறள்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியவாறு பள்ளி மாணவர்கள் மற்றும் திருக்குறள் பற்றாளர்கள் திருக்குறள் ஓதிக்கொண்டு மாணவர் ஒருவர் திருவள்ளுவர் போன்று வேடமணிந்து சமுதாயக்கூடம் வரை ஊர்வலமாக சென்றனர்,
அதனைத் தொடர்ந்து மாணவிகளின் திருக்குறள் பாடல், திருக்குறள் நடனம், திருக்குறளின் சிறப்புரை, திருக்குறள் குழு நடனம், திருக்குறளின் கேள்வி பதில் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றது,
1330 திருக்குறளையும் ஒப்பித்த மாணவிகளும் அவர்களது பெற்றோர்களும் கௌரவிக்கப்பட்டனர், இவ்விழாவில், சாத்தான்குப்பம் குடியிருப்போர் நல சங்க தலைவர் எக்ஸ்பிரஸ் எல்லப்பன் மற்றும் திருவள்ளுவர் கல்வி மன்ற பொறுப்பாளர்கள் முனைவர் சிவகுமார் பள்ளி ஆசிரியர் ஆசிரியைகள் பொதுமக்கள் பெற்றோர்கள் மாணவர்கள் என 500 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.