வெ.முருகேசன்- மாவட்ட செய்தியாளர், திண்டுக்கல்.
அமைச்சருக்கு எச்சரிக்கை விடுத்த பாமக மாநில பொருளாளர் திலகபாமா.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள கொத்தையம் ஊராட்சிக்கு உட்பட்ட விவசாயத்திற்கு பயன்பட்டு வந்த அரளி முத்து குளத்தை தரிசு நிலமாக தமிழக அரசு அறிவித்தது. மேலும் சிட்கோ அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வரும் விவசாயிகளை பாமக மாநில பொருளாளர் கவிஞர் திலகபாமா நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் தமிழக அரசு இத்திட்டத்தை கைவிடாவிட்டால் வரும் 24ம் தேதிக்கு பிறகு விவசாயிகளுடன் சேர்ந்து 10 க்கும் மேற்பட்ட ஜே.சி.பி இயந்திரத்துடன் இந்த குளத்தை தூர்வாரி விவசாயத்திற்கு பயன்படும் வகையில் பொதுமக்களுக்கு ஒப்படைக்கப்படும் என அமைச்சர் சக்கரபாணிக்கு எச்சரிக்கை விடுத்தார்
கவிஞர் திலகபாமா.