காட்டுமன்னார்கோவிலில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் 20 ஆண்டுகளாக இருந்து வந்தவர் செந்தில்நாதன்(40). இவர் இங்கிருந்து திருநெல்வேலி முகாமில் தங்கி பணியாற்ற ஓராண்டு அனுமதி பெற்று அங்கு சென்றார்.

அங்கு சென்றவர் அங்கேயே ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்த நிலையில் திடீரென வருவாய்த் துறையினருக்கு தகவல் அளிக்காமல் போலி ஆதார் கார்டு தயார் செய்து பெங்களூர் சென்று ஒரு வாடகை வீட்டில் தங்கி வட்டிக்கு விடும் தொழில் செய்து வந்துள்ளார்.

இந்நிலையில் இதுகுறித்து தகவல் அறிந்த காட்டுமன்னார்கோவில் வருவாய் துறையினர் அனுமதி இல்லாமல் தப்பிச்சென்ற செந்தில்நாதன் குறித்து காவல்துறையில் புகார் அளித்ததன் பேரில் அவரை காட்டுமன்னார்கோவில் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இவர் ஏற்கனவே 2017 ஆம் ஆண்டு போலி ஆவணங்கள் மூலம் வெளிநாடு தப்பி செல்ல முயன்ற போது அதனை பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கண்டறிந்து கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *