தேவதானப்பட்டி பேரூராட்சியில் தூய்மை பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ளது தேவதானப்பட்டி இந்த பேரூராட்சியில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பேரூராட்சி துணைத் தலைவர் நிபந்தன் தூய்மை பணியாளர்களை ஜாதியைச் சொல்லி இழிவுபடுத்தி பேசியதாக கூறப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான தா தை அடுத்து தேவதானப் பட்டி பேரூராட்சியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்கள் அனைவரும் ஒன்று கூடி தேவதானப்பட்டி பேரூராட்சி அலுவலகம் முன் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தினார்கள்
இந்த போராட்டத்தின் போது தூய்மை பணியாளர்கள் கூறும்போது தேவதானப்பட்டி பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் நிபந்தன் தூய்மை பணியாளர்களின் பாதுகாவலனாக விளங்குகிறார்
அவர் எங்களை தூய்மை பணியாளர்களை ஜாதி சொல்லி இழிவு படுத்தி பேசவில்லை என்றும் ஒரு சிலர் ஆதாயத்திற்காக திட்டமிட்டு பழி போட்டு எங்களை வஞ்சிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றார்கள்
என்றும் தேவதானப்பட்டி பேரூராட்சியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்கள் புகார் எதுவும் கொடுக்காத நிலையில் தனிப்பட்ட நபர்கள் துணைத் தலைவர் மீது புகார் கொடுத்து எங்களை இழிவுபடுத்தும் செயலில் ஈடுபட்டது மிகவும் கண்டனத்துக்கு உரியது இந்த செயல் மிகவும் கண்டிக்கத்தக்கது என்று தெரிவித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார்கள்