தென்காசி மாவட்டம்
செங்கோட்டை நகராட்சி பகுதியில் கட்டிமுடிக்கப்பட்ட புதிய ரேசன் கடை கட்டிடத்தை உடனடியாக திறந்து பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவர உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தென்காசி மாவட்ட ஆட்சியரிடம் செங்கோட்டை முன்னாள் நகர்மன்றத் தலைவர் எஸ்.எம்.ரஹீம் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்துள்ளார்.
செங்கோட்டையில் சுதந்திரப் போராட்ட வீரர் வாஞ்சிநாதனின் 113 வது நினைவு தின விழாவில் கலந்து கொள்ள வருகை தந்த தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவரிடம் செங்கோட்டை நகர முன்னாள் திமுக செயலாளரும், செங்கோட்டை முன்னாள் நகர்மன்ற தலைவருமான செங்கோட்டை எஸ்.எம்.ரஹீம் கொடுத்துள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-
தென்காசி மாவட்டம், செங்கோட்டை நகராட்சி 8 வது வார்டு பகுதியில் செயல்படும் முழு நேர நியாய விலை கடையை பிரித்து 9 வது வார்டு பகுதியில் செயல்பட வைக்கும் நோக்கத்தில் புதிதாக கட்டப்பட்ட கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டுள்ள நிலையில் இதுவரை திறக்கப்படாமல் உள்ளது. இந்த பகுதி நேர நியாய விலை கடையை உடனடியாக திறப்பதோடு பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வர உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ கே கமல் கிஷோரிடம் அளித்த கோரிக்கை மனுவில் அவர் தெரிவித்துள்ளார்
மேலும் எஸ்.எம்.ரஹீம் மாவட்ட ஆட்சித் தலைவர் கமல்கிஷோரிடம் அந்த கடை குறித்த விவரங்கள் மற்றும் உடனடியாக திறக்கப்பட வேண்டிய அவசியம் பற்றியும் எடுத்துக் கூறினார். அப்போது
செங்கோட்டை நகர் மன்ற தலைவர் ராமலட்சுமி, செங்கோட்டை நகராட்சி 9 வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் மேரிஅந்தோணிராஜ் மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.