திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் கடைவீதியில் தமிழ்நாடு காங்கிரஸ் தொழிலாளர் யூனியன் சார்பாக ராகுல் காந்தியின் 54- வது பிறந்தநாள் கொண்டாட்டம் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு காங்கிரஸ் தொழிலாளர் யூனியன் திருவாரூர் மாவட்டத் தலைவர் குலாம் மைதீன் தலைமை வகித்தார். வலங்கைமான் நகர காங்கிரஸ் முன்னாள் தலைவர் கலியமூர்த்தி, வலங்கைமான் வட்டார காங்கிரஸ் துணைச் செயலாளர் விஜயகாந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக வலங்கைமான் வட்டார காங்கிரஸ் தலைவர் சத்யமூர்த்தி கலந்து கொண்டு ராகுல் காந்தியின் அரசியல் வாழ்க்கை குறித்து சிறப்பு உரையாற்றினார்.
தொடர்ந்து கட்சியினர், மாணவர்கள், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி அனைவராலும் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
இதில் சாரநத்தம் சுந்தரம், சுந்தரமூர்த்தி, மாணவர் காங்கிரஸ் குகன் மற்றும் கட்சியினர், மாணவர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
முடிவில் நகர மாணவர் காங்கிரஸ் தலைவர் சந்தோஷ் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணிக்கு வாக்களித்தமைக்கும், காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்தமைக்கும், பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி கூறினார்.