தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில் தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் தனிப்படையினர் மாறுவேடத்தில் போதைப்பொருள் கடத்தப்படுகிறதா என்பதை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்
இந்த நிலையில் தனிப்பட உதவி ஆய்வாளர் ரவிக்குமாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் பீச் ரோடு இனிகோ நகர் பகுதியில் தொடர்ந்து கண்காணித்துக் கொண்டிருந்தனர் அப்போது இனிகோ நகரைச் சேர்ந்த தாமஸ் மகன் நிர்மல் ராஜ் என்ற நிர்மல் வயது 28 அதுபோல சிவானி வயது 26 இனிகோ நகர் சேர்ந்த இருவரும் கிரிஸ்டல் மெத்த பைட்டனமன் 8 கிலோ கொண்ட போதை பொருளை விற்பனை செய்ய இருந்தபோது தனிப்படை உதவி ஆய்வாளர் ரவிக்குமார் தலைமையிலான தனிப்படையினர்
இருவரையும் கைது செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர் இது தொடர்பாக மதுவிலக்கு காவல்துறையினரும் விசாரித்து வருகின்றனர் தூத்துக்குடியில் போதை பொருட்கள் அதிக அளவில் விற்பனை செய்யப்படுகிறது
என்பது குறிப்பிடத்தக்கது இருப்பினும் விலை உயர்ந்த போதை பொருள் சுமார் 8 கோடி மதிப்புள்ள போதை பொருளை மாவட்ட எஸ்பி பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில் தனிப்படையினர்
கைது செய்து போதைப்பொருள் பிடித்திருப்பது வரவேற்கத்தக்கது ஆனால் அதுபோல தூத்துக்குடி மாவட்டத்தில் முற்றிலும் போதை பொருளை தடுக்க வேண்டும் என்பது தான் பொதுமக்களின் கோரிக்கையாகவே உள்ளது