தமிழகம் முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்திய முமூடி கொள்ளையர்கள் ராஜபாளையம் போலிசார் கைது செய்து சாதனை
கொள்ளையடித்த பனத்தில் சொத்துக்களை வாங்கி குவித்தது அம்பலம்
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் உட்கோட்டம், தெற்கு காவல் நிலைய சரகம், ராஜபாளையம் தெற்கு ஆண்டாள்புரத்தில் உள்ள முருகானந்தம் என்பவரது வீட்டில் கடந்த 24.02.2024ம் தேதி வீட்டில் உள்ளவர்களை கட்டி போட்டு 56 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்தது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்யப்பட்டு, புலன் விசாரணையில் இருந்து வந்தது.
மேற்படி வழக்கில் தனிப்படை அமைத்து பல்வேறு கோணங்களில் புலன் விசாரணை செய்து வழக்கின் எதிரி மற்றும் திருடு போன சொத்துகளை விரைவில் கண்டுபிடித்து நடவடிக்கை விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா உத்தரவின் பேரில் ராஜபாளையம் தனிப்படையினர் மற்றும் குற்றப்பிரிவு காவலர்கள் மேற்படி வழக்கு சம்பந்தமாக துரித நடவடிக்கை மேற்கொண்டு தேடி வந்ததில் சுரேஷ்குமார் (27), த.பெ.ராஜா, தென்கரை, பெரியகுளம், அருண்குமார் (27), த.பெ.அழகர்சாமி, தென்கரை, பெரியகுளம் ஆகியோர்கள் பெரியகுளத்தை சேர்ந்த மூர்த்தி என்பவர் தலைமையில் மேலும் 5 பேர்களுடன் மேற்படி கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது
தெரிய வந்தது. மேலும் லட்சுமி, அனிதாபிரியா, நாகஜோதி, சீனிதாய், மோகன், மகாலட்சுமி ஆகியோர்கள் அவர்களுக்கு உடந்தையாக இருந்து திருட்டு சொத்துகளை மறைப்பதற்கும், விற்று சொத்துக்களை வாங்கவும் உதவி புரிந்ததும் தெரிய வந்தது. மேற்படி எதிரிகளை கைது செய்து விசாரணை செய்ததில் ராஜபாளையம், திருவில்லிபுத்தூர் உட்கோட்டம் மற்றும் மாநிலத்தின் பல்வேறு இடங்களில் கடந்த 2021ம் ஆண்டு முதல் நடைபெற்ற கொள்ளை மற்றும் திருட்டு வழக்குகளில் மேற்படி எதிரிகள் சம்பந்தப்பட்டுள்ளார்கள் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேற்படி எதிரிகளிடமிருந்து ரூ.75 லட்சம் மதிப்புள்ள 150 பவுன் தங்க நகைகள் பணம் ரூ.2,50,000/- லேப்டாப் 3, Tablet – 3, கைபேசி 3 மொத்த மதிப்பு 84 லட்சம் ஆகியவற்றை கைப்பற்றப்பட்டது.
மேலும் கொள்ளையடித்த நகைகளை விற்று ராஜபாளையத்தில் ரூ.4 கோடி மதிப்புள்ள காட்டன் மில் ஒன்றும் ராஜபாளையம் புதிய பேருந்து நிலையம் முன்பு 6 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து வாங்கியுள்ளதும் தெரிய வந்துள்ளது.
மேற்படி சொத்து ஆவணமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தலைமறைவாக உள்ள மூர்த்தி உள்ளிட்ட ஐந்து எதிரிகளை தனிப்படையினர் தேடி வருகின்றனர். மேற்படி வழக்குகளை கண்டறிய சிறப்பாக புலன் விசாரணை செய்து குற்றவாளிகளை கைது செய்து கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களையும் பறிமுதல் நடவடிக்கை மேற்கொண்ட ராஜபாளையம் டிஎஸ்பி அழகேசன் இன்ஸ்பெக்டர்கள் முரளிதரன் . பவுல்ஏசுதாசன் எஸ்ஐகள் சக்திகுமார் (குற்றப்பிரிவு கமலக்கண்ணன் . தமிழலகன் (சைபர்கிரைம்) இதில் முக்கிய பங்குவகித்த குற்றப்பிறிவு காவலர் காளிதாஸ் மற்றும் தனிப்படை காவல்துறை அதிகாரிகளை நேரில் அழைத்து காவல் கண்காணிப்பாளர் பரோஸ்கான் அப்துல்லா சான்றிதழ் மற்றும் வெகுமதி வழங்கி பாராட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது