பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகாவிற்குட்பட்ட பழைய விராலிப்பட்டி கிராமத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் ஆய்வு மேற்கொள்ள வந்திருந்த அதிகாரிகளிடம் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்கள் மனு அளித்திருந்தனர்.
அதில் மிக முக்கியமாக குடிநீர் மிகுந்த துவர்ப்புத் தன்மை அதிகரித்து குடிக்க ஏதுவாக இல்லை என்று தெரிவித்திருந்தனர்.
இதன்மீது மாவட்ட ஆட்சியர் உடனடி நடவடிக்கை எடுத்ததின் அடிப்படையில் ஜூன்-21ஆம் தேதியான இன்று அக்கிராமத்திற்கு வந்த சுகாதார துறை மற்றும் மருத்துவதுறை அதிகாரிகள் குடிநீரை ஆய்வு செய்ய எடுத்துக்கொண்டு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியினை சுத்தம் செய்யும் பணி படுவேகமாக நடைபெற்று வருகிறது.
உடனடி நடவடிக்கை எடுத்த மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு பழைய விராலிப்பட்டி கிராம பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.