வலங்கைமான் அருகே உள்ள கோவிந்தகுடி அரசினர் மேல்நிலைப் பள்ளியில் புதிதாக முன்னாள் மாணவர் சங்கம் துவங்கப்பட்டு, புதிய சங்க நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள கோவிந்தகுடி அரசினர் மேல்நிலைப் பள்ளியில் புதிதாக முன்னாள் மாணவர் சங்கம் துவங்கப்பட்டது. புதிய சங்கத்திற்கான நிர்வாகிகளாக தலைவராக செந்தில், துணைத் தலைவர் வழக்கறிஞர் ஜி.பி. மணிகண்டன், செயலாளர் அகமது கபீர், மாரிமுத்து, ரமேஷ் ஆகியோர்களும் மற்றும் 13 செயற்குழு உறுப்பினர்களும் தேர்வு செய்யப்பட்டனர். 100% தேர்ச்சி பெற்ற மாணவர்களை பாராட்டியும், தேர்ச்சி பெற உறுதுணையாக இருந்த ஆசிரியர்களையும் புதிதாக தொடங்கப்பட்ட முன்னாள் மாணவர் சங்கத்தின் சார்பில் பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு ஆவூர் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் வீ. அன்பரசன் தலைமை வகித்தார். ரோட்டரி சங்க நிர்வாகிகள், அரிமா சங்க நிர்வாகிகள் மற்றும் கலைஞர் டிவி புகழ் கவி முத்து பாரதி பேச்சாளர், ஒன்றிய குழு உறுப்பினர் சீதாலட்சுமி மாரிமுத்து, ஊராட்சி மன்ற தலைவர் வழக்கறிஞர் ஜி பி மணிகண்டன், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ரஹ்மத் அலி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் கோவிந்தகுடி ஊராட்சி முக்கிய பிரமுகர்களான கலிக்குள் ஜமான், அசோக் ராஜ், என். செல்வம், அப்துல் லத்தீப், ஜியாவுதீன், ராமச்சந்திரன், முகமது ரபிக்,முகமது பாரூக், ஆர். சுதாகர், ராசப்பா, ராமலிங்கம் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். முன்னதாக பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ,மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.