தேசிய சட்டப்பணிகள் இன் ஆணைக்குழு மற்றும் மாநில சட்ட்பணிகள் ஆணைக்குழு உத்தரவின் அடிப்படையில் தூத்துக்குடி மாவட்டம் மாப்பிள்ளையுரணி கிராமத்தில் கட்டாய கல்வி உரிமைச் சட்டம் குறித்து சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
மேற்படி முகாமில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவை சேர்ந்த பட்டியல் வழக்கறிஞர் திரு.T. அலெக்சாண்டர் அவர்கள் தலைமை தாங்கினார்..
பட்டியல் வழக்கறிஞர் தனது தலைமை உரையில் படி படிப்பு ஒன்று உன்னை காப்பாற்றும் மேலும் இந்த காலத்தில் கல்வி முக்கியத்துவம் குறித்தும், எதிர்காலத்தில் கல்வியே வாழ்க்கை முன்னேற்றத்துக்கு பயன்படும் என்றும், இலவச சட்ட உதவி மைய செயல்பாடுகள் குறித்தும், குழந்தைகளுக்குசெல்ஃபோன் பயன்பாட்டில் உண்டான ஆபத்து குறித்தும், இந்த வயதில் படிப்பு ஒன்று மட்டுமே மிக முக்கியம் எனவும் விளக்கமாக பொதுமக்களுக்கு எடுத்துரைத்தார்.
மேற்படி முகாமில் 60- க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டு தங்களுக்கு உண்டான சட்டம் சம்மந்தமான கேள்விகள் கேட்டு அதற்கு உண்டான பதிலை கேட்டு பயன் அடைந்தனர். .