செய்தியாளர்: பா. சீனிவாசன், வந்தவாசி.
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த சி.ம.புதூர் கிளை நூலகம் சார்பில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மாணவர்களுக்கான சிறார் வாசிப்பு மன்றம் தொடக்க விழா நடைபெற்றது.
இந்த நிகழ்விற்கு பள்ளி தலைமை ஆசிரியர் டி.ஆர்.நம்பெருமாள் தலைமை தாங்கினார். பள்ளி ஆசிரியைகள் அகிலாண்டம், தங்கம், துர்காதேவி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி மா. கதிரொளி சிறார் வாசிப்பு மன்றத்தை தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார். மேலும் வாசிப்பின் அவசியம் குறித்து ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மைய முதல்வர் பா. சீனிவாசன் கருத்துரைகளை வழங்கினார். மேலும் வாசிப்பு விழிப்புணர்வு செய்திதாள்கள் மற்றும் புத்தகங்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.
இறுதியில் நூலகர் ஜா.தமீம் நன்றி கூறினார்.