திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகம் சார்பில் வழங்கப்பட்ட பைனாகுலர் மைக்ராஸ்கோப் கருவிகளை திருவாரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் தி.சாருஸ்ரீ திருவாரூர் மாவட்ட காசநோய் கழகத்திற்கு வழங்கினார்
ஓ.என்.ஜி.சி சமுக பொறுப்புணர்வு திட்டத்தில் சுமார் 6.84 இலட்சம் மதிப்பில் 20 எண்ணிக்கையில் வழங்கிய பைனாகுலர் மைக்ராஸ்கோப் கருவிகளை திருவாரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், ஓ.என்.ஜி.சி முதன்மை பொதுமேலாளர் மனித வள தலைமை அதிகாரி முன்னிலையில் திருவாரூர் மாவட்ட காசநோய் கழகத்திற்கு திருவாரூர் மாவட்ட காசநோய் துணை இயக்குனர் அவர்களிடம் வழங்கினார்
இவை திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அடியக்கமங்கலம் கொட்டாரக்குடி கூத்தாநல்லூர் உள்ளிக்கோட்டை தலையாயமங்கலம் நீடாமங்கலம் கோவில்வெண்ணி வடுவூர் பெரும்பண்ணையூர் கண்கொடுத்தவணிதம், குடவாசல் திருவீழிமலை பேரளம் வேலங்குடி வலங்கைமான் ஆலங்குடி ஆதிச்சபுரம் எடையூர்சங்கேந்தி கொருக்கை, விளக்குடி ஆகிய ஆரம்ப சுகாதார நிலையங்களின் பயன்பாட்டிற்கு வழங்கப்படுகிறது
நிகழ்வில் ஓ.என்.ஜி.சி முதன்மை பொதுமேலாளர் மனித வள தலைமை அதிகாரி கணேசன் திருவாரூர் மாவட்ட காசநோய் துணை இயக்குனர் புகழ் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்
