தென்காசி மாவட்டம் செங்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்கள் மத்தியில் போதைப் பழக்கத்தின் தீங்குகள் குறித்து செங்கோட்டை காவல்துறையினர் மாணவர்களிடையே விளக்கினர்
இந்நிகழ்ச்சியில் செங்கோட்டை காவல்துறை ஆய்வாளர் ராஜேஷ் கண்ணா உதவி ஆய்வாளர் இளவரசி ஆகியோர் கலந்து கொண்டு புகையிலை மற்றும் போதைப் பொருட்களின் தீமைகள் குறித்து விளக்கம் அளித்தனர்
நாளைய தலைமுறையை போதையில்லா தலைமுறையாக உருவாக்க உறுதி கொள்ள வேண்டும் என்று ஒவ்வொரு மாணவனும் வருங்காலத்தில் நல்ல நிலையில் வருவதற்கு கல்வி மட்டுமே பிரதானம் என்று கூறினார் இந்நிகழ்வில் பள்ளி தலைமை ஆசிரியர் சுந்தரகுமார் பிற ஆசிரியர்கள் மாணவர்கள் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்