மதுரை தனியார் துவக்கப்பள்ளியில் மாணவர்களுக்கு இலவச உபகரண பொருட்கள்….
மதுரை, கீழச்சந்தைப் பேட்டை திருஞானம் துவக்கப்பள்ளியில் ” கற்கை நன்றே ” அமைப்பின் சார்பாக இலவச கற்றல் பொருட்கள் வழங்கப்பட்டன. தலைமை ஆசிரியர் சரவணன் அனைவரையும் வரவேற்றார். கற்கை நன்றே இனியவன் தலைமை தாங்கினார்.
கற்கை நன்று அமைப்பின் நாக வெங்கடேசன் , கீர்த்திகா மாணவர்களுக்கு இலவசப் பொருட்கள் வழங்கினர்.
மாணவர்கள் படித்து முன்னேற பொருளாதாரம் தடையல்ல. அரசு , அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு அரசு பல இலவச திட்டங்களையும் அளித்துவருகிறது.
உங்கள் மேல் படிப்பிற்கு வேண்டிய உதவிகளை நாங்கள் செய்து தருவோம் என குமரகண்ணன் பேசினார்.
பள்ளிச் செயலர் வழக்கறிஞர் சங்கீத்ராஜ் “கற்கை நன்று” அமைப்பினரை வாழ்த்திப் பேசினார். எல்லா மாணவர் களுக்கும் பென்சில் பாக்ஸ், லஞ்ச் பாக்ஸ், பென்சில், வாட்டர் கேன், ரப்பர், பென்சில் துருவி, பேனா போன்றவை வழங்கப்பட்டன.
மாணவர் மன்றத்தின் தலைவர் மதுமிதா நன்றி கூறினார்.