தேனி அருகே காட்டு நாயக்கன் பட்டியில் நடைபெற்று வரும் மது விற்பனையை தடுக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் குடும்பத் தலைவிகள் மனு குடும்பத் தலைவிகள் அளித்த மனு விவரம் தேனி மாவட்டம் தேனி ஒன்றியத்துக்கு உட்பட்டது காட்டுநாயக்கன்பட்டி ஊராட்சி இந்த கிராமத்தில் அரசு அனுமதி பெற்ற டாஸ்மாக் கடை இல்லை என்றாலும் தனியார் பெட்டிக்கடை மற்றும் வீடுகளில் மது விற்பனை 24 மணி நேரமும் சட்ட விரோதமாக விற்பனை மது செய்யப்பட்டு வருகிறது.
மேலும் நள்ளிரவு நேரத்தில் கூட மதுபானங்கள் தாராளமாக கிடைக்கிறது. கிராமத்தில் விவசாயமே வாழ்வாதாரமாக உள்ளது. இதனால் அன்றாடம் விவசாய கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தும் எங்கள் குடும்பம் மிகவும் வறுமையில் உள்ளது. எனவே மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா அவர்கள் இந்த சட்ட விரோத மது விற்பனையை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது