பெரியகுளம் பகுதியில் ரேஷன் அரிசி கடத்திய ஆட்டோ டிரைவர் கைது தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் ரேஷன் அரிசி கடத்துவதாக குடி மை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் பெரியகுளம் உழவர் சந்தை பகுதியில் வாகனத் தணிக்கையில் குடிமை பொருள் வழங்கல் துறை ஆய்வாளர் உதவி ஆய்வாளர் மற்றும் போலீசார் அந்த வழியாக வந்த ஆட்டோ TN,60.Y 3837 பதி வெண் கொண்ட ஆட்டோவை சந்தேகத்தின் பேரில் சோதனையிட்டனர்
இதில் ஆட்டோவில் 350 கிலோ ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ரேஷன் அரிசியை கடத்திய போடி நகரை சேர்ந்த ரெங்கசாமி மகன் பாஸ்கரன் என்பவரை கைது செய்த செய்த குடிமை பொருள் போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து ரேஷன் அரிசி கடத்திய ஆட்டோவை பறிமுதல் செய்தனர் பாஸ்கரன் சிறையில் அடைக்கப்பட்டார்
சமூக ஆர்வலர்களின் கோரிக்கை மத்திய மாநில அரசுகள் ஏழை எளிய மக்களுக்கு பல கோடி செலவில் ரேஷன் கடைகளில் இலவசமாக ஏழை எளிய பொதுமக்கள் பயன்பெற வேண்டும் என நல்ல நோக்கத்துடன் ரேஷன் அரிசி இலவசமாக வழங்குகிறது ஆனால் அந்த அரிசியை நமது அண்டை மாநிலமான கேரளாவுக்கு கடத்துவதற்கென்றே ஒரு கும்பல் இருக்கிறது அவர்கள் ரேஷன் கடை முன்பு நின்று கொண்டு அரிசி வாங்கும் பொது மக்களிடம் அங்கேயே பேரம் பேசி அரிசியை ரேஷன் கடை முன்பு விலைக்கு வாங்கி கேரளாவுக்கு கடத்திச் செல்லும் கும்பல் அதிகரித்து வருகிறது பெயரளவுக்கு எப்போதாவது ஒரு முறை ரேஷன் அரிசி கடத்தியதாக வழக்கு பதிவு செய்யும் அதிகாரிகள் தொடர்ந்து ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர் .