கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் முதல் போக நெல் சாகுபடிக்கு பாரம்பரிய மாறாமல் பழைய முறையிலேயே ஏர் பூட்டி மாடுகள் மூலம் நிலத்தை உழுது விவசாயம் செய்யும் விவசாயிகள் நம் இந்திய திருநாடு விவசாய நாடாகும் விவசாயத்தில் ஈடுபடும் விவசாயிகள் அதிகம் உள்ள நாடு தமிழ்நாடு அதேபோல் தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கில் தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சைக்கு அடுத்து கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் கூடலூர் முதல் பழனி செட்டிபட்டி வரை 14707 ஹெக்டர் நிலப்பரப்பில் நெல் விவசாயம் வருடத்திற்கு இரண்டு முறை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

தற்போது நடைபெற்று முடிந்த பாராளுமன்ற தேர்தல் தேர்தல் நடத்தை விதிகள் முடிவதற்கு முன்பே விவசாயிகளின் நலன் கருதி பொதுப்பணித்துறை அதிகாரிகள் மூலம் ஜூன் 1ஆம் தேதி முல்லைப் பெரியாறு அணையில் இருந்து நெல் விவசாயத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது

இந்த நிலையில் விவசாயிகள் பாரம்பரியம் மாறாமல் பழைய காலத்தில் உள்ளது போல இரண்டு மாடுகளுடன் ஏர் பூட்டி நிலத்தை உழுது நெல் விவசாயத்துக்கு நிலத்தை தயார்படுத்தி வருகின்றனர்

சில இடங்களில் இந்தப் பணி முடிந்து நெல் விதைப்பு பணிகளிலும் விவசாயிகள் மும்முரமாக கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் விவசாய பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்

அதற்கு தகுந்தாற்போல் நெல் சாகுபடி செய்யப்படும் நிலத்திற்கு ஏதுவாக சாரல் மழை கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்து வருவது விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *