அதிமுக முன்னாள் கவுன்சில ருக்கு விருந்துவழங்கி கெளரவித்த திமுக இளைஞர் அணி துணைச் செயலாளர் ஜோயல் தூத்துக்குடி எஸ்.எஸ். மாணிக்கபுரத்தில் அம்பேத்கரின் 133 வது பிறந்தநாள் விழா வி.சி.க தொகுதி துணைச் செயலாளர் ராமு (எ) ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.

இவ்விழாவில் 1000 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. மாநில திமுக இளைஞரணி துணைச் செயலாளர் ஜோயல் சிறப்பு அழைப்பாளராக இவ்விழாவில் கலந்து கொண்டு தூத்துக்குடி சாமுவேல்புரம் தொடக்கப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு ஸ்கூல் பேக்கும், மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் மற்றும் பொது மக்களுக்கு 5 கிலோ அரிசியும், சேலையும் வழங்கி வாழ்த்துரை வழங்கினார்.

இதனால் இவர் வருகையை ஒட்டி திமுக இளைஞரணியினரும், உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்றத்தினறும் இந்த பகுதியில் குவிந்ததால் அம்பேத்கர் பிறந்தநாள் விழா திருவிழா கோலம் பூண்டது.

மேலும், இவ்விழாவில் சாதனையாளர்களுக்கு அம்பேத்கர் பெயரில் விருதுகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து 20 ஆண்டு காலமாக மக்கள் அங்கிகாரத்தை பெற்று தொடர்ந்து மக்கள் பணி ஆற்றி வரும் அதிமுக பிரமுகரும், முன்னாள் கவுன்சிலருமான சென்பகச் செல்வனுக்கு மாநில திமுக இளைஞரணி துணைச் செயலாளர் ஜோயலும், மாநில வாி சரக்கு மற்றும் சேவை வாி அலுவலர் ராஜதுரையும் இனைந்து அம்பேத்கர் விருதை வழங்கி சிறப்பித்தனர்.

அதிமுக முன்னாள் கவுன்சிலருக்கு – மாநில திமுக இளைஞரணி துணைச் செயலாளர் ஜோயல் விருது வழங்கி கௌரவப் படுத்தியது தூத்துக்குடி அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *