கம்பம் நகரில் மாற்றுத்திறனாளிகளுக்கான புதிய அடையாள அட்டையை நகராட்சி நகர சபை தலைவர் வனிதா நெப்போலியன் வழங்கினார்
தேனி மாவட்டம் கம்பம் வட்டார முல்லை மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் சார்பில் புதிய மாற்றுத்திறனாளிக்கான அடையாள அட்டை வழங்கும் விழா நகராட்சி கூட்டம் அரங்கில் நடைபெற்றது
இந்த நிகழ்ச்சிக்கு நகர சபை தலைவர் வனிதா நெப்போலியன் தலைமை வகித்தார் நகராட்சி ஆணையாளர் மனிதநேயர் வாசுதேவன் முன்னிலை வகித்தார்
இந்த நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளிக்கான புதிய அடையாள அட்டை மாற்றுத்திறனாளிகள் ஏராளமான பேருக்கு வழங்கப்பட்டது மாற்றுத் திறனாளிகளான உ.அம்மா பட்டி ரேவந்த் சீப்பாலக்கோட்டை மதன் பூசாரணம் பட்டி சுதா கம்பம் முகமது ர ஷாக் உள்பட ஏராளமான மாற்றுத் திறனாளிகளுக்கு அதற்கான அடையாள அட்டை வழங்கப்பட்டு மாற்றுத்திறனாளிகள் பயனடைந்தார்கள் இதற்கான முழு முயற்சியும் எடுத்த மாற்றுத் திறனாளிகளுக்கு உரிய அடையாள அட்டை பெற்றுக்கொடுத்த தமிழ்நாடு அரசு மாநில மாற்றுத்திறனாளிகள் நல வாரிய உறுப்பினர் கம்பம் எஸ் கருப்பையா மற்றும் கம்பம் நகராட்சி ஆணையாளர் வாசுதேவன் நகர சபை தலைவர் வனிதா நெப்போலியன் ஆகியோரின் தன்னலமற்ற சேவை மென்மேலும் சிறக்க வேண்டுமென அவர்களுக்கு மாற்றுத்திறனாளிகள் சார்பில் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொண்டு நிகழ்ச்சி நிறைவு பெற்றது