பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள பரவாய் கிராமத்தை சேர்ந்தவர் முத்து (42) இவர் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார்
இவரது மனைவி பானுமதி (37) இவர்களது மகன்கள் சர்வேஸ் (11) ஆறாம் வகுப்பு படித்து வருகிறார். இன்னொரு மகன் பாவேஸ் (9) நான்காம் வகுப்பு படித்து வருகிறார்.
மாலை சுமார் 6 மணி அளவில் பானுமதி தனது மகன்களை அழைத்துக்கொண்டு பக்கத்தில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது வீட்டிற்குள் இருந்து புகை வரவே அக்கம் பக்கத்தினர் பானுமதிக்கு தகவல் கூறி வர சொல்லி உள்ளனர்.
பானுமதி வீட்டின் அருகே வந்து கொண்டிருந்தபோது திடீரென வீட்டிற்குள் இருந்த சமையல் சிலிண்டர் வெடித்து வீடு முழுவதும் தீப்பற்றிக் கொண்டது. தகவல் அறிந்து வந்த வேப்பூர் தீயணைப்புத்துறையினர் நிலைய அலுவலர் (பொ) கரிகாலன் தலைமையில் நீண்ட நேரம் போராடி அணைத்தனர்.
இந்த தீ விபத்தில் வீட்டிற்குள் இருந்த பீரோ கிரைண்டர் கட்டில் உட்பட ஏழு பவுன் நகை பத்தாயிரம் ரூபாய் ரொக்கம் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் தீயில் எரிந்து விட்டது.
சேதமான பொருட்கள் மதிப்பு சுமார் 5 லட்சம் ரூபாய் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் ஆபத்தில்லை.இதனால் அப்பகுதியில் சுமார் 4 மணி நேரம் பரபரப்பாகவும் பதட்டமாகவும் காணப்பட்டது .