ராஜபாளையம் காவல்துறை போதை எதிர்ப்பு விழிப்புணர்வு பேரணி விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் உட்கோட்டம்)
காவல்துறை சார்பில்
போதை எதிர்ப்பு மற்றும் ஒழிப்பு உறுதிமொழி மற்றும் விழிப்புணர்வு பேரணி நடந்தது
டிஎஸ்பி அழகேசன் தலைமையில் நாடார் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் வெங்கடேசன் முன்னிலையில் விருதுநகர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சாந்தி
காவல்துறை ஆய்வாளர்கள் சீமான்(போக்குவரத்து டவுன்) நவாஸ்தீன் (போக்குவரத்து நெடுஞ்சாலை)
உடன் காவல்துறையினர் பள்ளி ஆசிரிய ஆசிரியர்கள் கேர் சொசைட்டி தன்னார்வலர்கள் குழுவினர் மற்றும் 200 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு போதை எதிர்ப்பு உறுதிமொழி ஏற்றனர் பின்னர் கைகளில் விழிப்புணர்வு வாசங்கள் அடங்கிய பதாகைகள் ஏந்தி கோசமிட்டபடி பேரணி ரயில்வே பீடர் ரோடு காந்தி சிலை ரவுண்டானா பழய பேருந்து நிலையம் போன்ற முக்கிய சாலை வழியாக சென்றது போகும் வழியில் அனைவருக்கும் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது