திண்டுக்கல் மாவட்டம் பழனியில் ஒருங்கிணைந்த நீதிமன்ற நுழைவாயில் முன்பு பழனி வழக்கறிஞர்கள் சங்கம் சார்பாக மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய குற்றவியல் சட்டங்களை எதிர்த்தும் குற்றவியல் சட்டங்களில் சமஸ்கிருத மொழியை திணிக்க கூடாது என்ற கோரிக்கையை முன்வைத்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றன.
நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மத்திய ஒன்றிய அரசை கண்டித்து வழக்கறிஞர்கள் பல்வேறு கோஷங்களை எழுப்பியவாறு தங்களது கண்டனங்களை தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றன.
இந்த ஆர்ப்பாட்டத்தின் தலைமையாக பழனி வழக்கறிஞர் சங்க தலைவர் அங்கு ராஜ், செயலாளர் கலை எழில்வாணன் மற்றும் முன்னிலையாக துணைத்தலைவர் மணிகண்டன் பொருளாளர் சரவணன் மற்றும் வழக்கறிஞர்கள் ராஜமாணிக்கம் பால்சாமி, ஆசைத்தம்பி, செல்லதுரை உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் 30க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டம் நடைபெற்றன.
மேலும் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள சட்டங்களை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் மாநில ஒருங்கிணைந்த நீதிமன்றங்களில் தமிழில் வழக்காடுவதற்கு அனுமதி வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றன.